நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ. 5000 கோடி பிஎம் கேர்ஸ் நிதி குறித்த விவரம் தேவை: காங்கிரஸ்

புது டெல்லி:

பிரதமர் மோடி நிர்வகித்து வரும்பிஎம் கேர்ஸ் ஃபண்டிற்கு ரூ. 5000 கோடி நிதி கிடைத்துள்ளது என்றும் இதன் விவரம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி  கூறுகையில், பிரதமரின் அவசரகால நிதிக்கு 60 சதவீத நன்கொடை ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஐஓசி போன்ற அரசு நிறுவனங்கள் மூலம் கிடைத்துள்ளது.  

இந்த நிதி திட்டத்துக்கு ரூ.5,000 கோடி வரை நன்கொடை கிடைக்கும் நிலையில், சட்டரீதியாக எந்த ஒப்புதலும் இல்லாமல் நன்கொடை பெறப்படுகிறது. இது அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.

இந்த நிதி குறித்த விவரங்கள் ரகசியமாக மூடி மறைக்கப்படுகின்றன. இந்த நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்?

இந்த நிதி திட்டத்தின் கீழ் பெறப்படும் நன்கொடை எதற்காக செலவிடப்படுகிறது?

நன்கொடை அளிப்பவர்கள் யார்?

இதுகுறித்து பொதுவெளியில் தெரிவிக்காதது ஏன்? இந்த நிதியை எந்தவித தணிக்கைக்கும் உட்படுத்தாதது ஏன்?

அரசு நிறுவனங்கள் மூலம் பொது நிதி நன்கொடையாக வழங்கப்படுவதால், பிரதமரின் அவசரகால நிதியை மத்திய கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டும்.

இந்த நிதி குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset