நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடகத்தில் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடை

புது டெல்லி:

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடை ரத்து செய்த மாநில அரசின் முடிவுக்கு மே 9ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

கர்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டது.

கர்நாடகத்தில் மே 10இல் சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா  ஆகியோர் இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் தேதி வரை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து உத்தரவு நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதித்தனர்.

இதனிடையே, கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்தது சரியான நடவடிக்கை என்று கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset