நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியர்களை எரிச்சலடையச் செய்த ஜெர்மனி பத்திரிகையின் கார்ட்டூன்

புது டெல்லி: 

மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்தது. 

இதைக் கருப்பொருளாக வைத்து ஜெர்மன் நாட்டின் ’டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) என்ற பத்திரிகை கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த கார்ட்டூன் இந்தியர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

அந்தக் கார்ட்டூனில் சீனா மற்றும் இந்திய தேச கொடிகளை பிரதிபலிக்கும் இரண்டு ரயில்கள் தத்தம் தடங்களில் செல்கின்றன. அதில் இந்திய நாட்டின் ரயில், சீன ரயிலை முந்துவதுபோல் வரையப்பட்டுள்ளது. 

இந்திய ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் மேற்கூரை உட்பட பெரும்பாலான இடங்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பது போல இந்தக் கார்ட்டூனில் உள்ளது. 

ஆனால் சீன இரயிலோ  அந்த நாட்டின் தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில் அவர்கள் புல்லட் ரயிலில் பயணிப்பது போல சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. 

அதன்மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் எதுவுமின்றி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

“ஜெர்மனி, இது இந்தியாவை தரம் தாழ்த்தும் வகையிலும் இனவெறியைப் பரப்பும் வகையிலும் உள்ளது. இந்தக் கார்ட்டூன் இந்தியாவின் யதார்த்தத்துடன் எந்த வகையிலும் பொருந்தவில்லை. இதன் நோக்கம் இந்தியாவைத் தாழ்த்துவதே” என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.

ரயில் கூரை மீது வங்காளதேச மக்கள் தான் பயணிப்பார்கள். அந்த நாட்டில்தான் மக்கள் ரயில் கூரையில் அமர்ந்து பயணிப்பார்கள். அதை இந்தியா என ஜெர்மனியர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என கருதுகிறேன் என இசைக் கலைஞர் மைக்கேல் மகால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பெரும்பாலான ரயில் தடங்கள் மின்மயமாக இருக்கும் சூழலில் இந்த கார்ட்டூன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அன்ஷுல் சக்சேனா.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset