செய்திகள் சிந்தனைகள்
மலேரியா சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு தேவை
கோலாலம்பூர் :
ஒவ்வொர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேரியா நோயைக் டுப்படுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இவ்வண்டு உலக அளவில் நோய் பாதிப்பு சுமையை குறைப்பதற்கான புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுதல் மற்றும் உயிர்களை காப்பாற்றுதல் என்பதே இவ்வாண்டின் உலக மலேரியா தினத்தின் கருப்பொருளாகும்.
உலகளவில் 2021-ஆம் ஆண்டில் மட்டுமே 24 கோடியே 70 லட்சம் புதிய மலேரியா நோய்ச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயினால் மரணமடைந்துள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவைப் பொருத்தமட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தாலும் மலேரியா குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று சுகாதார அமைச்சகத்தின் நோய்க் கட்டுப்பாட்டு பிரிவின் மூத்த தலைமை உதவி இயக்குநர் டாக்டர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அதாவது 2018-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரை உள்நாட்டில் இந்நோய் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
-:அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am