நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

26 மாநிலக் கட்சிகள் ரூ.189 கோடி நன்கொடை

புது டெல்லி:  

2021-22ஆம் ஆண்டில் பிஆர்எஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 மாநில கட்சிகள் ரூ.189 கோடிக்கு நேரடியாக நன்கொடை பெற்றுள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், காசோலை, வரைவோலை, வங்கிப் பரிமாற்றம், ரொக்கப் பணம் ஆகியவை வாயிலாக 26 மாநிலக் கட்சிகள் ரூ.189 கோடிக்கு நன்கொடை பெற்றுள்ளன.

பிஆர்எஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளுக்கு மட்டும் 85 சதவீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதிகபட்சமாக பிஆர்எஸ் கட்சி ரூ.40.90 கோடி நன்கொடை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ.38.24 கோடியும், ஐக்கிய ஜனதா தளம் ரூ.33.25 கோடி, சமாஜவாதி கட்சி ரூ.29.79 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.20 கோடி பெற்றுள்ளன.

2021-22ஆம் நிதியாண்டில் திமுக ரூ.2.14 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

அதிமுக, பிஜு ஜனதா தளம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை எந்த நேரடி நன்கொடையும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset