நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய பிபிசி மீது அமலாக்கத் துறை வழக்கு

புது டெல்லி:

பிபிசி இந்தியா ஊடக நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு நடத்தி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் மீது அந்நியச் செலாவணி மீறல் வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்து, இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்ய வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு பிபிசி இந்தியா நிறுவன அதிகாரிகளை அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டதாகவும், அதையடுத்து, பிபிசி துணை நிர்வாக ஆசிரியர் ஒருவர், அமலாக்கத் துறை விசாரணை அதிகாரிகள் முன்பாக வியாழக்கிழமை ஆஜரானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து "இந்தியா: தி மோடி க்வஸ்டீன்' என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி அண்மையில் வெளியிட்டது.

அந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கடந்த ஜனவரி 21ஆம் தேதி  தடை விதித்தது.

 "கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளது' என்று பிபிசி இந்தியா நிறுவனத்தின் மீதான அமலாக்கத்துறை வழக்குப் பதிவு குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset