நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடக முஸ்லிம்களின் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து நிறுத்தம்

புது டெல்லி:

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத  இடஒதுக்கீடு உத்தரவை நிறுத்தி வைப்பதாக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அண்மையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இந்த நான்கு சதவீத இடஒதுக்கீட்டை லிங்காயத், ஒகாலிகாஸ் சமுதாயத்தினருக்கு பிரித்து வழங்கப்படும் என்றும் முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் பிரிவில் பெற்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கர்நாடக பேரவைக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் சமூகத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், துஷாந்த் தவே, கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகி, இடஒதுக்கீடு தொடர்பாக எந்தவித ஆய்வும் நடத்தாமல் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான எந்தவித தரவுகளும் மாநில அரசிடம் இல்லை' என்றனர்.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும் அதுவரையில் கர்நாடக அரசு பிறப்பித்த இந்த இடஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில் பணிநியமனங்கள் வழங்கப்படாது என்றும் உறுதி அளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ரத்து செய்தது தவறானது என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset