நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

11ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து அபுல் கலாம் ஆசாத் குறிப்பு நீக்கம்

புது டெல்லி:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி NCERT கவுன்சில் சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மேற்கொண்ட பள்ளி பாடத் திட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, "பொறுத்தமற்ற மற்றும் ஒரே தகவல் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது என்று இதற்கான காரணத்தை ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இதைப்போல் குஜராத் கலவரம், முகல் நீதிமன்றங்கள், அவசரநிலை, ஆர்எஸ்எஸ் தடை, பனிப் போர், நக்ஸலைட்டுகள் இயக்கம் தொடர்பான பாடங்களை பாட புத்தகங்களிலிருந்து அண்மையில் நீக்கியது.

மௌலானா ஆசாதின் பெயரும் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரி தற்போது ஜவாஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல், அம்பேத்கர் ஆகியோர் இடம்பெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபை குழு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset