நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் தயாரிக்கிறது சீரம்

புது டெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கிவிட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சீரம் நிறுவனத்திடம் 60 லட்சம் கோவோவேக்ஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. இதனை பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்தலாம்.

சீரம் நிறுவனத்தில் 90 நாள்களில் 60 லட்சம் முதல் 70 லட்சம் வரை கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். 2021 டிசம்பரில் கோவிஷீல்ட் உற்பத்தி நிறுத்தப்பட்டது என்றார்.

இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 223 நாள்களில் இல்லாத அதிகபட்சமாகும். புதன்கிழமை மட்டும் 16 பேர் உயிரிழந்தனர். 40,215 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset