நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் மோதல் தீவிரம்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் கடந்த பாஜக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொந்த கட்சி முதல்வர் அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.

காங்கிரஸ் மேலிடத்தின் எச்சரிக்கையை மீறி அவர் சச்சின் பைலட் போராட்டத்தை மேற்கொண்டார்.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.

கடந்த 2018இல் நடைபெற்ற ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.  கெலாட் முதல்வராகவும், பைலட் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

கடந்த 2020 ஜூலையில் மாநிலத் தலைமையை மாற்ற வலியுறுத்தி,  பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஒரு மாதம் நீடித்த அரசியல் குழப்பம், கட்சித் தலைமையின் தலையீட்டை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இருவருக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில், சச்சின் பைலட் தொடங்கிய உண்ணாவிரதத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், இதர தலைவர்கள் உள்ளிட்ட பைலட்டின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.  

உண்ணாவிரத நிறைவின்போது பேசிய பைலட், "எனது போராட்டம் ஊழலுக்கு எதிரானது. முந்தைய பாஜக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்கள் மீது தற்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்' என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset