நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ. 20 ஆயிரம் கோடி முதலீடு: ராகுல் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் புது விளக்கம்

புது டெல்லி:

அதானி குழுமத்துக்கு ரூ.20,000 கோடி முதலீடு போலி நிறுவனங்கள் மூலம் வந்ததாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டுமுதல் நடைபெற்ற பங்கு விற்பனை மூலம் அந்தப் பணம் வந்ததாக புது விளக்கத்தை அதானி குழுமம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அதானி குழுமத்துக்கு ரூ.20,000 கோடி முதலீடு வந்தது. இது போலி நிறுவனங்களின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த பினாமி பணம் யாருடையது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், அதானி குழுமம் விரிவான விளக்க அறிக்கையை திங்கள்கிழமை அவசரமாக வெளியிட்டது. 

அதில், "கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் பங்கு விற்பனை மூலம் ரூ.23,500 கோடி கிடைத்துள்ளது. அதில் சுமார் ரூ.20,000 கோடி மீண்டும் குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அபுதாபியைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள விவரம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை உள்ளிட்ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அதானி குழுமத்தைச் சீர்குலைக்க பல போட்டி நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் முயலுகின்றன என்று அதானி குழும அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset