நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது: அமித் ஷா

புது டெல்லி:

இந்தியாவின் ஒரு அங்குல அளவு நிலத்தைக்கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அருணாசலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

சீன எல்லையோரத்தில் அமைந்துள்ள அருணாசலின் கிபிதூ கிராமத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பங்கேற்று  அமித் ஷா பேசுகையில்,

இந்திய நிலப் பகுதிகளை எவர் வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. தற்போது இந்திய எல்லைப் பகுதிகள் மீது கண்வைக்கக் கூட எவரும் துணிவதில்லை.

இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக் கூட எவரும் ஆக்கிரமிக்க முடியாத நிலையை ராணுவத்தினரும், இந்தோ-திபெத் எல்லைப் படையினரும் உறுதி செய்து வருகின்றனர்.

எல்லைப் பகுதிகளைக் காப்பதற்கு பிரதமர் மோடி  அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  

மாறாக, "ஜெய்ஹிந்த்' என்று கூறியே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இதுவே மக்களின் நாட்டுப்பற்றை வெளிக்காட்டுகிறது. மக்களின் அந்த உறுதிப்பாட்டின் காரணமாகவே சீனாவால் அருணாசலை ஆக்கிரமிக்க முடியவில்லை என்றார் அவர்.

கடந்த சில மாதங்களாக சீனப் படையினர் இந்திய எல்லைக்குட்பட்ட நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset