நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாநில கட்சிகளுக்கு ரூ.852 கோடி தேர்தல் நன்கொடை

புது டெல்லி:

திமுக உள்ளிட்ட 10 மாநில கட்சிகள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம்  ரூ.852 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த வருவாய்-செலவின விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், 36 மாநில கட்சிகள் மொத்தமாக ரூ.1,213 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக, பிஜு ஜனதா தளம், பாரத ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், தெலுங்கு தேசம் கட்சி, எம்ஜிபி ஆகிய 10 மாநில பிராந்திய கட்சிகளின் வருவாய் மட்டும் ரூ.852.88 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக திமுக ரூ.318 கோடியை நன்கொடையாகப் பெற்றது. ரூ.307 கோடியுடன் பிஜு ஜனதா தளம் அதற்கடுத்த இடத்தில் உள்ளது.

2020-21-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மொத்தமுள்ள 36 கட்சிகளில் 20 கட்சிகளின் நன்கொடை அதிகரித்துள்ளது.

இந்த நன்கொடையில் ரூ.283 கோடியை திமுக செலவிடாமல் உள்ளது. பிஜு ஜனதா தளம் ரூ.278 கோடியையும் பாரத ராஷ்டிர சமிதி ரூ.190 கோடியையும் செலவு செய்யாமல் வைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset