
செய்திகள் தமிழ் தொடர்புகள்
எல்ஐசி கட்டத்தில் தீ - துரிதமாக அணைத்த தீயணைப்பினர்
சென்னை:
மின்கசிவு காரணமாக சென்னை அண்ணா சாலை யில் உள்ள எல்ஐசி கட்டடத்தில்ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையில் உயரமான கட்டடங்களில் ஒன்றான எல்ஐசியின் மேல் தளத்தில் இருந்த பெயர் பலகையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அரைமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை. காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
இதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm