
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதில்
சென்னை:
சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 1008 சம்ஸ்கிரு உரையாடல் அமர்வுகளின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா . இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம்.
“வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம். “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை”என்கிறோம்.
இவ்வாறு அன்பில் மகேஸ் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm