
செய்திகள் விளையாட்டு
சென்னையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
சென்னை:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்தது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று ஒருநாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இணை ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து முதல் 10 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்தனர். இந்த இணையை 11-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார். ட்ராவிஸ் ஹெட் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மிட்செல் மார்ஷை 47 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா.
டேவிட் வார்னர் 23 ரன்களிலும், மார்னஸ் லாபுசாக்னே 28 ரன்களிலும் கிளம்ப 30 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை சேர்த்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் (25), அலேக்ஸ் கேரி (38) அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் ஆடினார்கள். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 269 ரன்களை சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதுடன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஹம்மத் சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது. துவக்கத்தில் இருந்தே இந்தியா மிகவும் சிரமப்பட்ட ரன்களை சேர்க்க ஆரம்பித்தது.
ரோஹித் சர்மா அதிரடியாக துவங்கினார். அவரது 30 ரன்களில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.
சுப்மன் கில்லும் அடித்து ஆடினார். அவரது 37 ரன்களில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் இருந்தது.
அடுத்து ஆடிய விராட் கோலி அவரது பாணியில் சிறப்பாக ஆடி 54 ரன்கள் எடுத்து கொடுத்தார். அவர் மட்டும் தான் இந்திய அணியில் 50 ரன்களை கடந்தார்.
கே எல் ராகுல் 32, ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 16 ரங்களுக்கு திரும்பிவிட்டார். கடைசி நேரத்தில் முஹம்மத் சமி அதிரடி காட்ட நினைத்தார். 14 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பிறகு சொல்ல ஒன்றுமில்லை. 248 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 2:35 pm
அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am