நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பூப்பந்து துறையில் அதிகமான இந்தியர்களை உருவாக்க வேண்டும் என்பதே விஷன் பூப்பந்து கிளப்பின் இலக்கு: டத்தோஸ்ரீ சுரேஸ்

கிள்ளான்:

பூப்பந்து துறையில் அதிகமான இந்தியர்களை உருவாக்க வேண்டும் என்பதே விஷன் பூப்பந்து கிளப்பின் முதன்மை இலக்கு.

அக் கிளப்பின் தலைவர்  டத்தோஸ்ரீ சுரேஸ் ராவ் இதனை கூறினார்.

விஷன் பூப்பந்து கிளப் தற்போது கோத்தா கெமுனிங் பூப்பந்து விளையாட்டு கிளப் என்ற பெயரில் தற்போது பூப்பந்து போட்டியை நடத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் முதல் முறையாக இன்று வெட்ரன் பூப்பந்து போட்டியை நடத்துகிறது.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு கிட்டத்தட்ட 9,000 ரிங்கிட் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

முதல் முறை என்பதால் வெட்ரன் போட்டியாளர்களுக்காக இப் போட்டி நடத்தப்படுகிறது.

அடுத்தாண்டு முதல் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவருக்காகவும் இப் போட்டிகள் நடத்தப்படும்.

இதன் மூலம் வருங்காலங்களில் பூப்பந்து துறையில் அதிகமான இந்தியர்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்காக உள்ளது.

குறிப்பாக வசதிக் குறைந்த இளைஞர்களுக்காக இலவசமாக பயிற்சிகள் வழங்கவும் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

விரைவில் அதற்கான முயற்சிகள் தொடங்கும் என்று டத்தோஸ்ரீ சுரேஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset