செய்திகள் வணிகம்
வங்கிக் கடனுதவி திட்டங்கள் குறித்து இந்திய வணிகர்களுக்கு விளக்கமளிப்பு
கோலாலம்பூர்:
வங்கிக் கடனுதவி திட்டங்கள் குறித்து இந்திய வணிகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது என்று மைக்கியின் உதவித் தலைவர் மு. திருநாவுக்கரசு கூறினார்.
சிறுதொழில் நடுத்தர வணிகத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய வர்த்தகர்களுக்கு வங்கி கடனுதவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மைக்கி இந்த விளக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் மைக்கி, முவாமாலாட் வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது.
வரும் மே மாதத்தில் மைக்கியும் முவாமாலாட் வங்கியும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளன.
இதன் முன்னோட்டமாக இந்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
மைக்கியில் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
முவாமாலாட் வங்கியின் வர்த்தக பிரிவு தலைவர் டத்தோ நஸிர், மஸூரி தெங்கி லோங், குலா ஆகியோர் வங்கியின் சார்பில் கலந்து கொண்டனர்.
வங்கி அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு வணிகர்களுக்கு நேரடியாக உரிய விளக்கங்களை வழங்கினர்.
கிட்டத்தட்ட 74 சிறு நடுத்தர வணிகர்களுடன் பெரிய வர்த்தகர்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
வரும் காலங்களில் இன்னும் பெரிய அளவில் இந்த விளக்கக் கூட்டங்களை நடத்த மைக்கி திட்டமிட்டு உள்ளது என்று திருநாவுக்கரசு கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
