நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 ஆண்டுகளில் 230 பேருக்கு மரண சகாய நிதி மஇகா வழங்கியுள்ளது: டான்ஸ்ரீ ராமசாமி

கோலாலம்பூர்:

கடந்த நான்கு ஆண்டுகளில் 230 பேருக்கு மஇகா மரண சகாய நிதி வழங்கி உள்ளது என்று அதன் பொருளாளர் டான்ஸ்ரீ ஆர். ராமசாமி கூறினார்.

கிளைத் தலைவர்கள் நலன் காக்கும் வகையில் மஇகா பல திட்டங்களை வகுத்து உள்ளது.

குறிப்பாக  மரண சகாய நிதி திட்டம் வாயிலாக கிளைத் தலைவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

70 வயதுக்கு கீழ் மரணமடையும் கிளைத் தலைவர்ளுக்கு 10 ஆயிரம் வெள்ளியும் அதற்கு மேற்ப்பட்டவர்களுக்கு 3 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019ல் 55, 2020ல் 58, 2021ல் 72, 2022ல் 45 என மொத்தம் 230 பேருக்கு இந்த மரண சகாய நிதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 23 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டு உள்ளது.

இன்று மேலும் 8 கிளைத் தலைவர்களின் குடும்பத்தாருக்கு மரண சகாய நிதி வழங்கப்பட்டது என்று டான்ஸ்ரீ ராமசாமி கூறினார்.

கிளைத் தலைவர்களை தவிர்த்து உறுப்பினர்கள், இந்திய மக்கள் என உதவி கேட்டு தலைமையகத்திற்கு வருபவர்களுக்கு உதவிகளை மஇகா செய்து வருகிறது.

அதே வேளையில் இளைஞர்களை கவரும் வகையில் பல திட்டங்களை மஇகா கொண்டு உள்ளது.

முன்பு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்றார்கள். ஆனால் இன்று வீட்டிற்கு ஒரு வர்த்தகரை உருவாக்க வேண்டும்.

இதன் மூலமே இந்திய சமுதாயம் பொருளாதார ரீதியில் வலுபெற முடியும். ஆகவே இதுபோன்ற விவகாரங்களில் மஇகா கவனம் செலுத்தும் என்று டான்ஸ்ரீ ராமசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset