நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் பஸ் - டிரெய்லர் லோரி மோதி விபத்து பஸ் ஓட்டுநர் பலத்த காயம்

ஈப்போ:

ஈப்போவில் நிகழ்ந்த பஸ் - டிரெய்லர் லோரி மோதி விபத்துத்துக்குள்ளானதில் பஸ் ஓட்டுநர் பலத்த காயத்துடன் உயிர் தப்பி உள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை ஈப்போவில் இருந்து கோல கங்சார் செல்லும் சாலையின் தாமான் ஸ்ரீ டேசாவுக்கு அருகே  நிகழ்ந்தது.

இன்று காலை 6.53 மணியளவில் பயணிகளுக்கான பேருந்து டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

காலை நேரம் என்பதால் பஸ்சில் அதிகமான பயணிகள் இல்லை. 

இருந்தாலும் பேருந்தை ஓட்டிய 47 வயதுடைய இந்திய ஆடவர் கடுமையான காயங்களுக்கு மத்தியில் உயிர் தப்பி உள்ளார்.

காயமடைந்த அவ்வாடவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தீயணைப்புப் படை பேச்சாளர் கூறினார்.

- பார்த்திபன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset