நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சோமாலியாவில் பஞ்சத்தால் 43,000 பேர் பலி: ஐ.நா அறிவிப்பு

நைரோபி:

சோமாலியாவில் நிலவி வரும் பஞ்சத்தால் கடந்த ஆண்டு மட்டும் 43,000 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பும் குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும், இந்த ஆண்டிலும் பஞ்சத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, லண்டன் கல்லூரியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விவரம்:

சோமாலியாவிலும், அதன் அண்டை நாடான எத்தியோப்பியாவிலும் தொடர்ந்து 6ஆவது முறையாக பருவமழை பொய்த்தது.

இதன் காரணமாக, அங்கு கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத மிக மோசமான வறட்சி மற்றும் பஞ்சம் நிலவியது. இதில், பெரும்பாலான சிறுவர்கள் உள்பட 43,000 பேர் பலியாகினர்.

நடப்பு ஆண்டிலும் 60 லட்சம் பேர் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் சுமார் 18,000 பேர் பஞ்சத்தால் பலியாவார்கள் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

-ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset