செய்திகள் உலகம்
அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
லண்டன்:
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது காலிஸ்தான் பிரிவினையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கக் கோரும் பிரிவினைவாதிகள், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக வளாகத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்புகளை உடைத்துச் சென்று இரண்டு காலிஸ்தான் கொடிகளை நிறுவினர். இதனை அறிந்த துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக அந்தக் கொடிகளை அகற்றினர்.
இதனைத்தொடர்ந்து வெறிகொண்ட காலிஸ்தான் ஆதரவு கும்பல், துணைத் தூதரக கதவையும் ஜன்னல்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கினர்.
முன்னதாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரக கட்டடத்தில் ஏறிய காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், அங்கு கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை கீழ் இறக்கி, காலிஸ்தான் கொடியை ஏற்றினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேசியக் கொடியை அவமதித்த அனைவரையும் விரைந்து கைது செய்ய பிரிட்டனிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்று இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவருக்கு எதிரான இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் எதிரே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு தில்லியில் உள்ள அமெரிக்க பொறுப்பு தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 9:05 pm
ஆம்ஸ்டர்டாமின் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் தீ பிடித்தது
January 1, 2026, 5:51 pm
ஜொஹ்ரான் மம்தானி திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்து பதவியேற்றார்
January 1, 2026, 11:39 am
சிங்கப்பூரில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
December 30, 2025, 10:03 pm
கலீதா ஜியா மறைவுக்கு வங்கதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவிப்பு
December 30, 2025, 4:54 pm
பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் திடீர் தாக்குதல்: இருவர் பலி
December 29, 2025, 5:40 pm
இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீயில் 16 பேர் கருகி மாண்டனர்
December 29, 2025, 11:17 am
மெக்சிகோவில் மோசமான ரயில் விபத்து: 13 பேர் மரணம்
December 28, 2025, 10:22 pm
தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்
December 28, 2025, 4:18 pm
