நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்

நியூயார்க் : 

டிவிட்டர், முகநூல், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து,  9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்தப் பணிநீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- அஸ்வினி

தொடர்புடைய செய்திகள்

+ - reset