நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

'பங்காற்றும் சமுதாயம்; வெற்றிகரமான சமுதாயம்': சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கத்தின் குடும்ப ஒன்று கூடல் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர்வாழ் நாகப்பட்டினம் சங்கத்தின் குடும்ப தின நிகழ்ச்சி சாங்கி சிவில் சர்வீஸ் கிளப்பில் கடந்த மார்ச் 12ஆம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. 

சிங்கப்பூர் வாழ் நாகப்பட்டினம் குடும்பத்தார் சுமார் 250 பேர் கலந்து கொண்ட குடும்ப தின நிகழ்வுக்கு உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் ஃபைசல் இப்ராஹீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

நாகப்பட்டினம் சங்கத்தின் தலைவர் ஹாஜி ஷேக் மைதீன் ஜஹபர் சாதிக் வரவேற்புரை நிகழ்த்தியபின் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணிவித்து, நாகப்பட்டினம் பற்றி முன்னாள் தூதர் திரு கே. கேசவபாணி எழுதிய நூலை நினைவுப்பரிசாக வழங்கினார். 

சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி  அன்பரசுக்கு சங்கத்தின் துணைத்தலைவர் சலாஹுத்தீனும், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்  முஹம்மது இர்ஷாதுக்கு செயலாளர் ஹாரூன் பிலாலும்,  மஸ்ஜித் அப்துல் கபூர் தலைவர் ஹாஜி பைமான் சுபான்காடுக்கு சங்கத்தின் பொருளாளர் ஜியாவுத்தீனும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.

May be an image of 10 people, people standing and people sitting

May be an image of 2 people, people standing and outdoors

சிங்கப்பூர் சமாதான நீதவான் திரு நிஜாமுத்தீன் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர்  முகம்மது பிலால், சமூகத் தலைவர்கள், ஆதரவாளர்களான டிஎம்ஒய் நகைக்கடை மேலாளர் சலீம், டிஃபன் பவன் உணவக அதிபர் சுல்தான், பரக்கத் உணவக அதிபர் மு. அ. மசூது, கிளிஃபர்டு ஜெம்ஸ் நாணயமாற்று நிறுவன அதிபர் ஹாஜி முஹம்மது ரபீக், ராயல் கிங்ஸ் டிரேடிங் அதிபர் சிராஜுத்தீன் உட்பட சிலருக்கு அவர்களின் தொடர் ஆதரவுக்காக சிறப்பு செய்யப்பட்டது.

May be an image of 13 people, people standing and outdoors

குடும்பதினத்தை முன்னிட்டு சிறுவர்கள், பெரியவர்கள், மகளிர் என மூன்று பிரிவுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  பெரியவர்களுக்கான வடம் இழுக்கும் போட்டியை சிறப்பு விருந்தினர் டாக்டர் ஃபைசல் துவக்கி வைத்தார். சிறுவர்களுக்கு சாக்கு ஓட்டம், பெண்களுக்கு இசை நாற்காலி என விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக டாக்டர் ஃபைசல் இப்ராஹீம், தன் சிறப்புரையில் நாகப்பட்டினம் சங்கம் துவங்கப்பட்ட ஒருசில ஆண்டுகளிலேயே பல்வேறு சமூக சேவைகளில் தனித்தும் நட்பு அமைப்புகளோடு இணைந்தும் செயலாற்றி வருவதை வெகுவாகப் பாராட்டினார். 

வாழ்த்துரை வழங்கிய திரு அன்பரசு, பங்காற்றும் சமுதாயம்; வெற்றிகரமான சமுதாயம்! என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பது தன்னை கவர்ந்ததாகவும், சிறுவர்கள், இளையர்கள், பெரியோர் என குடும்பமாக கலந்து கொண்டு குதூகலம் அடைவதைக் கண்டு தான் மகிழ்வதாகவும் கூறினார். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாதிக் தலைமையிலான ஏற்பாட்டுக்குழு மிக சிறப்பாக செய்திருந்தனர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset