
செய்திகள் இந்தியா
பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி இஸட் பிளஸ் பாதுகாப்புடன் வலம்வந்த குஜராத் நபர் பலே மோசடி
புது டெல்லி:
பிரதமர் அலுவலக செயலர் எனக் கூறி ஜம்முகாஷ்மீரில் மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குஜராத்தைச் சேர்ந்த கிரண் பாய் படேல், பிரதமர் அலுவலகக் கூடுதல் செயலர் எனக் கூறி ஜம்மு காஷ்மீரில் இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்துள்ளார்.
3ஆவது முறையாக அவர் ஜம்முகாஷ்மீர் சென்றபோதுதான் அவர் மோசடியில் ஈடுபட்டதைக் கண்டறிந்த காவல் துறையினர் அவரைக் கடந்த 3ஆம் தேதி கைது செய்தனர். பல்வேறு மோசடிகள் தொடர்பாக அவர் மீது குஜராத்தில் ஏற்கெனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
நாட்டின் பாதுகாப்பில் இது முக்கியத்துவமிக்க விவகாரம். ஜம்முகாஷ்மீர் போன்ற முக்கிய இடத்தில் பாதுகாப்புப் படையினரை 5 மாதங்களுக்கு மேலாக ஒருவர் ஏமாற்றிக் கொண்டு சுற்றியுள்ளார். அரசின் உளவுப் பிரிவின் செயல்பாட்டை இச் சம்பவம் கேள்விக்குள்ளாக்குகிறது.
நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படுமானால், இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலகப் போவது யார்? ,இதுபோன்ற ஏமாற்றுக்காரர்கள் கூட எளிதில் இஸட் பிளஸ் பாதுகாப்பைப் பெற்றுவிட முடியுமா? அவருக்குப் பாதுகாப்பு வழங்க அனுமதி வழங்கியது யார்? இந்த விவகாரத்தில் ஒன்றியஅரசு பதிலளித்தாக வேண்டும்'' என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கூறுகையில், ""குஜராத்தில் இருந்து வந்த நபர், பிரதமர் அலுலக அதிகாரி எனக் கூறி ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்தையே ஏமாற்றியுள்ளார்.
துப்பாக்கி குண்டு துளைக்காத வாகனம், இசட் பிளஸ் பாதுகாப்பு, ஐந்து நட்சத்திர விடுதியில் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. தினமும் மாலை அதிகாரிகளுடன் சிறப்புக் கூட்டத்தையும் அவர் நடத்தியுள்ளார் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am