நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரசிகர்களைக் கவர்ந்த சந்தோஷ் நாராயணின் இசை நிகழ்ச்சி 

கோலாலம்பூர்: 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் SOUNDS OF THE SOUTH இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாணடமான முறையில் நேற்றிரவு AXIATA ARENA வில் நடைபெற்றது. 

இந்த இசை நிகழ்ச்சிக்கு சுமார் 12 ஆயிரம் பேர் வரை கலந்துக்கொண்டனர். பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிசரன், பிரியங்கா, தீ ஆகியோர் பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நடிகர்கள் சித்தார்த் மற்றும் துருவ் விக்ரம் வருகை மேற்கொண்டு தங்களின் படைப்புகளையும் வழங்கி சென்றனர். 

360 பாகையில் மேடை தயார் செய்யப்பட்டு நேரடியாக பாடல்கள் வாசிக்கப்பட்டு பாடல்கள் பாடப்பெற்றது. குறிப்பாக, தேன்மொழி, கண்ணம்மா, எஞ்சாய் எஞ்சாமி, நெருப்புடா பாடல்கள் AXIATA ARENA அரங்கை அதிர வைத்தது. 

REACCH PRODUCTIONS தயாரித்த இந்த இசைநிகழ்ச்சியின் சமூக வலைத்தளத்தின் இணைய ஊடகமாக நம்பிக்கை ஊடகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 - மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset