செய்திகள் மலேசியா
தேசிய மற்றும் இடைநிலைப் பள்ளியில் தமிழ்க் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்: மஇகா வலியுறுத்து
போர்ட்டிக்சன்:
தேசிய மற்றும் இடைநிலைப் பள்ளியில் தமிழ்க் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
மஇகா தொகுதித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, தமிழ்ப்பள்ளி குறித்தும் தமிழ்க் கல்வி குறித்தும் கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பில் பலர் கருத்து தெரிவித்தனர்.
மலேசியாவில் வாழும் இந்திய சமுதாயத்தின் அடையாளமாக தமிழ்ப்பள்ளிகள் விளங்கி வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் தற்போது மாணவர்கள் பற்றாக்குறை பிரச்சினை நிகழ்வுகிறது. இதற்கு முதலில் தீர்வு காண வேண்டும்.
நமது மாணவர்களை தமிழ்ப்பள்ளிகளுக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதே வேளையில் 6ஆம் ஆண்டுக்குப் பின் அவர்கள் தமிழ்க் கல்வியை பயில்வதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
காரணம், தமிழ்ப்பள்ளியை காப்பாற்றுவதற்காக பிள்ளைகளை இப் பள்ளியில் சேர்த்து விட்டு இடைநிலைப் பள்ளி சென்றதும் தமிழ்க் கல்வியை பயிலாமல் இருப்பது சரியாக இருக்காது.
இப்படி இருந்தால் தமிழ்க் கல்வியும் மொழியும் எப்படி வளரும் என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது.
இதன் அடிப்படையில்தான் தேசிய மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க் கல்வி கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி
December 22, 2025, 10:51 pm
நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்
December 22, 2025, 10:48 pm
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
