
செய்திகள் மலேசியா
மஇகாவை உருமாற்றத்துடன் வலுப்படுத்த வேண்டும்: தொகுதி தலைவர்களுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து
போர்ட்டிக்சன்:
மஇகாவை உருமாற்றத்துடன் வலுப்படுத்த வேண்டும் என்று தொகுதி தலைவர்களுக்கு அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின் மஇகாவின் அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
எதிர்கட்சி, ஆளும் கட்சி தற்போது கூட்டணி ஆட்சியில் மஇகா இடம் பெற்றுள்ளது. எது எப்படி இருந்தாலும் இக்கட்சி யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சொந்தக் காலில் நின்று சமுதாயத்திற்கு உரிய சேவைகளை வழங்கி வருகிறது.
இருந்தாலும் மஇகா அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னோக்கி செல்ல வேண்டும்.
இதன் அடிப்படையில்தான் தொகுதி தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் கடந்த மூன்று நாட்களாக போர்ட்டிக்சனில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கிளைகள் அனைத்தும் துடிப்பாக செயல்படுவது, அதன் எண்ணிக்கையை உயர்த்துவது, இளைஞர்களை கிளைத் தலைவர்களாக உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதே வேளையில் மஇகா தலைவர்களிடையே சிந்தனை மாற்றம் தேவை.
இது தான் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 5:14 pm
சகோதரனைத் திருக்கை மீன் வாலால் தாக்கி காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
May 14, 2025, 2:47 pm