நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புதினுக்கு எதிராக போர் குற்றத்துக்கான பிடிவாரண்ட்

தி ஹேக்:

உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர் குற்றத்துக்கான வாரண்டை பிறப்பித்துள்ளது.

அதில், போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புதின் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ரஷியாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலேக்சியிவ்னா லவோவா மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் இருவர் மீதும் போர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கைது செய்யும் அமைப்பு ஏதும் இல்லாததால் இந்த உத்தரவு வெறும் அறிவிப்பாக இருக்கும். இந்த சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset