நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதவி, பட்டத்திற்காக போராடாதீர் கெஅடிலான் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்து

ஷாஆலம்:

பதவி, பட்டத்திற்காக மட்டும் கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் போராடக்கூடாது என்று அதன் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் கூறினார்.

கெஅடிலான் கட்சியின் சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய உள்துறை அமைச்சருமான சைஃபுடின் கூறியதாவது,

மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் நம்பிக்கை கூட்டணி நாட்டில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ளது.

அதே வேளையில் மக்களுக்கு உரிய சேவைகளை நாம் வழங்க வேண்டும். நாட்டை வளப்படுத்த வேண்டும்.

பல சிக்கல்களில் சிக்கி தவிக்கும் மக்களை நாம் காப்பாற்ற வேண்டும். இப்படி நமக்கு பல கடமைகள் உள்ளது.

இந்த கடமைகளை நோக்கி நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

அதை விடுத்து பதவி, பட்டத்திற்கான கெஅடிலான் உறுப்பினர்கள் போராடக்கூடாது.

இதுவே தலைவரின் அறிவுறுத்தலாக உள்ளது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset