செய்திகள் விளையாட்டு
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி: அல்காரஸ், சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இண்டியன்வெல்ஸ்:
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்று ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், கனடா வீரர் அகர் அலிசிமெவை சந்தித்தார்.
இந்த போட்டியில் கார்லஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அகரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என பிரிட்ஸ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆதாரம்: https://bnpparibasopen.com
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 8:47 am
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் அணி வருகை
June 8, 2026, 8:43 am
இங்கிலாந்து அணி பயிற்சி முகாம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒன்பது பேர் காயம்
June 7, 2026, 12:06 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில், அர்ஜெண்டினா வெற்றி
June 7, 2026, 12:00 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
