நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரமலான் நோன்பு தொடங்குவதை முன்னிட்டு சிங்கப்பூர் கேலாங் செராய் மின்னொளியில் ஜொலிக்கிறது

சிங்கப்பூர்:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு கேலாங் செராய் இன்று ஒளியூட்டப்பட்டு ஜொலிக்கிறது.

ஆண்டுதோறும் இடம்பெறும் ரமதான் சந்தை இவ்வாண்டு பெரிய அளவில் வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு 70 கடைகளே இருந்தன. இவ்வாண்டு எண்ணிக்கை பத்து மடங்காகி, 700 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முந்திய ஆண்டுகளில் ரமதான் சந்தை முப்பது நாள்களே நடைபெறும். இம்முறை அது முப்பத்தாறு நாள்கள் இடம்பெறுகிறது.

அடுத்த மாதம் இருபத்தோராம் தேதிவரை கேலாங் செராய் ரமதான் சந்தை திறந்திருக்கும்.

இன்று இரவு இடம்பெறும் ஒளியூட்டு, வளர்ச்சி, நம்பிக்கை, புதிய தொடக்கம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு வருகிறது.

நன்றி: மீடியா கோர்ப்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset