செய்திகள் வணிகம்
9ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: துரைமுருகன் துவக்கி வைக்கிறார்
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் மார்ச் 18 முதல் 20ஆம் தேதி வரை 9ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெறுகிறது.
துபாயில் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து சென்னையில் இருந்து துரைமுருகன் இன்று துபாய் சென்றடைந்தார். அவரை மாநாட்டின் துணைத் தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரசிடெண்ட் அபூபக்கர், துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும்.
தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க பொருளாதார மாநாடு பெரும் துணையாக இருக்கும். மூன்று நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாஃபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
3 நாட்கள் மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு இயங்கலை - ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம்,அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம் போன்ற பல அம்சங்கள் அனைத்துலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
புதிய நிறுவனங்கள் தொடங்குதல், சிறு குறு தொழில், கட்டுமானம், ரியல் எஸ்டேட், இளைஞர் மேம்பாடு, கல்வி, தகவல் தொழில்நுட்பம் குறித்து பல்துறை வல்லுநர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளனர்.
தமிழகத்திற்கு பலமடங்கு தொழில் வளர்ச்சியை கொண்டுவந்து சேர்க்கும் மிகப்பெரிய பங்கு இந்த மாநாட்டின் மூலம் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
