
செய்திகள் வணிகம்
கென்யாவில் வர்த்தகங்கள் மேற்கொள்ள மலேசிய வர்த்தகர்களுக்கு வாய்ப்பு: நிவாஸ் ராகவன்
நைரோபி:
கென்யாவில் வர்த்தகங்கள் மேற்கொள்ள மலேசிய வர்த்தகர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று கோலாலம்பூர், சிலாங்கூர் வர்த்தக தொழிலியல் சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.
கென்யா மலேசியா வர்த்தக மாநாடு கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
மலேசியாவில் இருந்து நிவாஸ் ராகவன் தலைமையிலான குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அதே வேளையில் கென்யா வர்த்தக தொழிலியல் சங்கத்துடன் மலேசிய வர்த்தக சங்கத்தின் ஒப்பந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது தொடர்பாக நிவாஸ் ராகவன் வெளியிட்ட அறிக்கையில்,
ஆப்பிரிக்க கண்டத்தில் வளர்ந்து வரும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் கென்யாவும் அடங்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு கென்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 110.35 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகி உள்ளது.
அதே வேளையில் பொருளாதார மேம்பாட்டிற்காக பல திட்டங்களையும் அந்நாடு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்க வர்த்தக சந்தைகளில் நுழையும் முக்கிய மையப் பகுதியாகவும் கென்யா விளங்குகிறது.
தற்போது அந்நாட்டு வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து செயல்படுவதால் அந்நாடுகளின் வியாபாரங்கள் மலேசிய வர்த்தகர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm