நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லண்டனில் ராகுல் பேச்சும், அதானி விவகாரத்தாலும் இந்திய நாடாளுமன்றம் முடக்கம்

புது டெல்லி:

இந்திய ஜனநாயகம் தொடர்பாக லண்டனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோருமாறு பாஜகவினரும், அதானி விவகாரம் எழுப்பி எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து 2ஆவது நாளாக முடங்கின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய ஜனநாயகம் சீர்குலைந்து வருவதாக லண்டனுக்கு அண்மையில் சென்ற ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்த விவகாரத்தை முதல் நாள் கூட்டத்தில் எழுப்பிய பாஜகவினர், ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றனர். இதனால் கூட்டம் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாம் நாளிலும், ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.

அவர்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் எம்.பி.க்களும் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் இந்தியா குறித்து தெரிவித்த முறையற்ற கருத்துகளைத் தொகுத்து பதாகைகளாக அச்சடித்து கைகளில் ஏந்தியிருந்தனர்.

ஆளும் கட்சி எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே விவகாரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset