நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஆஸ்கர் விருதினை வென்றது 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்

ஹாலிவுட்:

சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்.

ஆஸ்கர் மேடையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. 

ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) நடனமாடினார்.
அவருடன் இணைந்து அப் பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். 

பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் மேடையில் பாடினர். 

கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- செய்திப்பிரிவு 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset