
செய்திகள் வணிகம்
கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு வாடிக்கையாளர் விவரம் அவசியம்
புது டெல்லி:
கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் பண வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
எண்ம பணப் பரிவர்த்தனைகள் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஒன்றிய நிதியமைச்சகம் எடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தரகு அமைப்புகள் இனி கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கும் அமைப்புகளாகவும் செயல்பட வேண்டும்.
அதாவது சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடைபெறும்போது அது தொடர்பாக வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய கண்காணிப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விவரத்தையும் 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது, கருப்புப் பணத்தை பயங்கரவாதத்துக்கு மடைமாற்றுவது, தேசத்துக்கு எதிரான செயல்களில் கருப்புப் பணத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், கருப்புப் பண முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 3, 2023, 2:00 pm
பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி
June 1, 2023, 10:49 am
பெனாசோனிக் தொழிற்சாலை மூடப்படுவதால் மலேசியர்கள் வேலையை இழக்க நேரிடும்
May 27, 2023, 5:06 pm
சிறு, நடுத்தர, மைக்ரோ, நிறுவன மாநாட்டில் 500 பேராளர்கள்: நிவாஸ் ராகவன்
May 24, 2023, 6:54 pm
மலேசிய நாணயம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது: ப்ளூம்பெர்க்கின் கணிப்பு
May 17, 2023, 5:16 pm
சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 2.2 பில்லியன் வெள்ளி நிகர லாபம்
May 16, 2023, 5:29 pm
11,000 பணியாளர்கள் பணி நீக்கம் - வோடபோன் அறிவிப்பு
May 15, 2023, 6:23 pm
அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் இணந்தது மஹா பெர்ஜாயா நிறுவனம்
May 12, 2023, 8:50 pm
50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்களுடன் திருமண ஆடையை உருவாக்கி உலக சாதனை
May 12, 2023, 1:13 pm