நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருக்குறளை நாம் பாதுகாக்க வேண்டாம் இயற்கை அதை பாதுகாக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

திருக்குறளை நாம் பாதுகாக்க வேண்டாம். எத்தனை ஆண்டுகளானாலும் இயற்கை அதை பாதுகாக்கும் என்று தப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழர் திருக்குறள் போன்ற ஒரு பொக்கிஷத்தை எழுதினார் என்றால் நம் இனம் எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அதே வேளையில் அந்த பொக்கிஷம் இத்தனை ஆண்டுகள் நம் கரங்களில் தவழ்கிறது என்றால் அது தான் அப் புத்தகத்தின் அற்புதமாகும்.

திருக்குறளில் என்ன பிரச்சினை என்றால் இப் புத்தகம் மொழி சார்ந்து நகர்ந்து விட்டது.

அதுவே பொருள் சார்ந்து நகர்ந்திருந்தால் உலகில் அனைத்துக்கும் ஒரு முன்னோடி புத்தகமாக திருக்குறள் இருந்திருக்கும்.

டாக்டர் மனோமணி ஏற்பாட்டில் கம்பார் கனிமொழி குப்புசாமியின் திருக்குறள் எளிய உரை புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

திருக்குறள் எளிமையான முறையில் மக்களை குறிப்பாக இளைய தலைமுறையை சென்றடைய வேண்டும் என கம்பார் கனிமொழி இம்முயற்சியை எடுத்துள்ளார்.

இந்த புத்தகம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது கம்பார் கனிமொழியாரின் இலக்காக உள்ளது.

அந்த இலக்கை நிச்சயம் அவர் அடைவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

எழுதிய புத்தகம், அதன் பொருளும் மக்களை சென்றடைய வேண்டும். அப்படி இல்லை என்றால் அப்புத்தகம் எழுதியும் எந்த பயனும் இல்லை.

இதனை எழுத்தாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய டத்தோஸ்ரீ சரவணன் இப்புத்தகத்தை 10 ஆயிரம் ரிங்கிட் கொடுத்து வாங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset