நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பவள விழா காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை:

பவள விழா காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொடி 117 வருட வரலாற்றுப் பெருமை கொண்டது.பச்சை நிறம் பசுமையின் அடையாளம், வளர்பிறை வளர்ச்சியையும், ஐந்து முனை நட்சத்திரம் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை நினைவுபடுத்துவதாக உள்ளது.

இந்திய சுதந்திர அடைந்த பின் முஸ்லிம் லீகின் அகில இந்திய கவுன்சில் உறுப்பினர்கள் 1948 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, சென்னை ராஜாஜி ஹாலில் காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கூடி இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் செயல்படுவது என முடிவெடுத்தனர்.

தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின்  கலாச்சார தனித் தன்மையை பாதுகாத்தல்,நலிந்த மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதை குறிக்கோளாக கொண்டு கடந்த 75 ஆண்டுகளாக  பணியாற்றி வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 

அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம்.அஹமது இப்ராஹிம், போக்கர் சாகிப், மகபூப் அலி பேக் உள்ளிட்ட முஸ்லிம் லீக் தலைவர்கள் இடம் பெற்று பயனுள்ள ஆலோசனைகள் வழங்கி அனைவருக்குமான இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக துணை நின்றுள்ளனர்.தமிழ் மொழியின் சிறப்பை அரசியல் நிர்ணய சபையில்  முழங்கியவர் காயிதே மில்லத்.

சமூக நீதி கொள்கைக்கு அடித்தளமாக இருக்கும் இடஒதுக்கீடு முறை 1909 ஆம் ஆண்டே மின்டோ மார்லி சீர்திருத்தத்தின் மூலம் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கிட்டை பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் என்பதை திராவிட இயக்கத் தலைவர்களே பாராட்டியுள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்ற அவையிலிருந்து  தொடர்ந்து அங்கும் வகிக்கும் வாய்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெற்று வருகிறது.  தமிழ்நாடு,கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிந்ததோடு,கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அமைச்சரவையிலும் அங்கம் வகித்துள்ளது.

கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் உருவாகுவதற்கு அடித்தளமிட்டவர் காயிதேமில்லத். இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சேர்ந்த சி.ஹெச்.முஹம்மது கோயா கேரள மாநிலத்தின் முதல்வராகவும்,இ.அஹமது இந்திய அரசின் ஒன்றிய இணை அமைச்சராகவும் பொருப்பேற்று  அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாக பணிகளாற்றியுள்ளனர். 

ஈராக் நாட்டில் இந்தியர்கள் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பொழுது, தீவிரவாதிகளுடன் அவர்களின் மொழியிலேயே நயமாக பேசி இந்தியர்களை  பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்தவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறைந்த தேசியத் தலைவர் இ.அஹமது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நாடெங்கிலும் அசாதாரணமான சூழ்நிலை உருவான போது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அமைதி நிலவி நல்லிணக்கம் தழைக்க முஸ்லிம் லீக் தலைவர்கள் உழைத்தனர்.

 நபி வழித்தோன்றல் செய்யிது அப்துர் ரஹ்மான் பாபகி தங்ஙள்,  சிறந்த பாராளுமன்றவாதி என புகழப்பட்ட ஜி.எம் பனாத்வாலா, இப்ராஹிம் சுலைமான் சேட் போன்றோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர்களாக பணியாற்றியுள்ளனர்.

மதங்களைக் கடந்து மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அமைப்புகளின் சார்பில் சி.ஹெச்.சென்டர், சிகாப் தங்கள் மனித நேய மையம், காயிதேமில்லத் மனித நேய மையம் மூலம் கிட்னி நோயாளிகளுக்கான மருத்துவ பணிகள், நிலமிருந்தும் வீடு இல்லாதோருக்கு இறையருள் இல்லங்கள், மரணத்தின் விழும்பில் உள்ள  நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று மனித நேயத்துடன் அரவனைத்திடும் (Palliative care service), கொரோனா பேரிடர் காலங்களில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை தனி விமானங்கள் மூலம் தாயகம் கொண்டு சேர்த்து சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளது.

"இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி'', "வன்முறைக்கு துணியவும் கூடாது, பணியவும் கூடாது. நன்முறையே நாட்டின் முன்னேற்றத்திற்கு நன்று" என முழங்கிய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் போன்ற  தலைவர்களால் வழி நடத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டை சார்ந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை தேசியத் தலைவராகக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

1962ம் ஆண்டு முதல் தி.மு.க.தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்து சமுதாயத்தின் கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி சாதித்துள்ளது.

முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு, கல்வி நிறுவனங்கள் உருவாக்கம், வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, வழிபாட்டு தளங்கள்- அடக்கத்தளங்கள் பாதுகாப்பு, மாவட்ட  அரசு காஜிகள் நியமனம், அவர்களுக்கான மதிப்பூதியம், உலமா ஓய்வூதியம், மறைவிற்கு பின்பு உலமாக்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம், உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கம், ஹஜ் மானியத்தை ஒன்றிய அரசு நிறுத்தினாலும் தமிழ்நாடு அரசு மூலம் ஏற்பாடு என முஸ்லிம் லீக் பெற்றுத்தந்த சாதனைகளை பட்டியலிடலாம்.கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்து தொடர்ந்து அமைச்சர்களாக பலரும் இடம் பெற்றதினால் 12 சதவீத தனி இடஒதிக்கீடு, கல்வியில் மிகவும் முன்னேறிவர்களாகவும், அரபு நாடுகளில் கேரள முஸ்லிம்கள் உயர் பதவிகளின் பல்லாயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சினைகளை சுமூகமாக அனைத்து சமூகங்களுடன் இணைக்கமாக பணிகளாற்றி பெருப்பான அரசியல் பாதையில் நடைபயில்வதை முஸ்லிம் லீக் தன் கடமையென கருதுகின்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா,அகில இந்திய மாநாடு எதிர்வரும் 2023மார்ச் எட்டாம் நாள் தொடங்கி மூன்று நாட்கள் சென்னையில் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற உள்ளது.

மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாநாடு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் கேரள தலைவர்,நபி வழித்தோன்றல் சையத் சாதிக் அலி தங்ஙள், கேரள சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் பி.கே. குஞ்ஞாலிக் குட்டி, நாடாளுமன்ற-சட்டமன்ற இன்னாள், மேனாள் உறுப்பினர்கள்,பல்வேறு மாநில நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். 

இம்மாநாட்டின் லட்சியமான, "75 ஆண்டு கால  பொறுப்பான அரசியலின் கண்ணியமான வாழ்க்கை" என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மாநாட்டில் இந்திய முஸ்லிம்களின் கண்ணியமாக வாழ்விற்கான வழிகாட்டுதல், அரசியல் தெளிவு, 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதின் அவசியம் வலியுறுத்தப்படும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் வரலாற்று பேரியக்கத்தின் பவளவிழா - அகில இந்திய மாநாட்டிற்கு கனிந்த இதயத்தோடு வரவேற்கிறோம்.

- செய்திப்பிரிவு 

தொடர்புடைய செய்திகள்

+ - reset