நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் ரோட்டரி கிளப்பின் மீண்டும் பள்ளிக்கு போகலாம்

சுபாங்:

பி 40 பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த பல சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி சீருடை, தளவாடப் பொருட்களை வழங்கி வருகிறது கோலாலம்பூர் ரோட்டரி கிளப்.

கடந்த 10 ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இச் சேவையை வழங்கி வரும் இந்த கிளப்.

இந்த ஆண்டும் தலைநகரில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த பி 40 பிரிவு குடும்பத்தை சார்ந்த 300 மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, காலணி, புத்தகப் பை, தளவாடப் பொருட்களை வழங்கியுள்ளது.

இன்று சுபாங் ஜெயா மைடின் பேரங்காடியில் இந்த மாணவர்களை நேரடியாக அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுத்ததாக அந்த கிளப்பின் தலைவர் பரமேஷ் சீனிவாசன் தெரிவித்தார்.

இந்த முறை ஹை காம் தமிழ்ப்பள்ளி, சிராமன் காடே ஆசிரமம், புக்கெட் ஜாலில் தோட்ட தமிழ்ப்பள்ளி, பத்து 14 பூச்சோங் தமிழ்ப்பள்ளி, அன்னையின் கருணை ஆசிரமம் போன்ற இடங்களில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு வழங்கியுள்ளதாக இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வம் கிருஷ்ணன் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset