
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை: புதுச்சேரி அரசு முடிவு
புதுச்சேரி:
அரசின் இலவசம் தேவைப்படாத, வசதியான குடும்பங்களுக்கு கவுரவ குடும்ப அட்டை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறையால், கவுரவ குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளது.
அரசின் இலவசங்கள் தேவைப்படாத, வசதி வாய்ந்த குடும்பங்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுச்சேரி அரசின் கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். கவுரவ குடும்ப அட்டை பெற்றவர்கள், புதுவையின் சிறப்பு பிரஜைகளாக கருதப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் துறையால் அளிக்கப்படும் அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது.
புதிய கவுரவ குடும்ப அட்டை வேண்டுபவர்கள் குடும்ப தலைவர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் அசல் குடும்ப அட்டையையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்து கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். உதவிக்கு 9442194480 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அல்லது அதே எண்ணில் Whatsapp/ குறுஞ்செய்தி மூலமாக தகவல் பெறலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm