நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உலக வனவிலங்கு தினம் 

ஒவ்வொர் ஆண்டும், மார்ச் 3-ஆம் தேதி உலக வனவிலங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

காலப் போக்கில் அழிந்துவரும் வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கும் இயற்கையின் சமநிலை சீராக இருப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. 

உயிர் சூழலியலுக்கு மிகவும் இன்றியமையாத உயிரினங்களாக இருப்பவற்றை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்பதே உலக வனவிலங்கு தினத்தின் முதன்மையான நோக்கமாகும். 

வன விலங்குகள், வனத்தில் உள்ள தாவரங்களைப் பாதுகாப்பது அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. 

2013-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதியன்று நடைபெற்ற ஐ.நா. அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் மார்ச் 3-ஆம் தேதியை உலக வனவிலங்கு தினமாக முடிவு செய்யப்பட்டது. 

வனவிலங்கு தொடர்பாக சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தினங்களில் இது மிக முக்கியமான நாள் ஆகும். 

அவ்வகையில், 'வனவிலங்கு பாதுகாப்பான கூட்டு' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இவ்வாண்டின் உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகின்றது. 

வனவிலங்குகளான சிங்கம், புலி, மான், யானை போன்றவற்றை சட்ட விரோதமாக வேட்டையாவதைத் தடுக்க வேண்டும். 

மேலும், இன்றையச் சூழலில் அழிந்து வரும் கொக்கு போன்ற பறவைகள், தாவரங்கள், மீன், ஆமை, பவளம் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் என பல்லுயிர்களை அழிவிலிருந்து மீட்பது நம்முடைய கடமையாகும். 

- அஷ்வினி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset