செய்திகள் சிந்தனைகள்
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
ஒரு மாதம் முழுக்க பகல் நேரங்களில் உண்ணாமல், பருகாமல், இச்சைகளில் ஈடுபடாமல் நோன்பு எனும் உன்னத வழிபாட்டை மேற்கொண்டோம்.
இரவு நேரங்களில் இயன்றவரை விழித்திருந்து சிறப்புத் தொழுகைகளை நிறைவேற்றினோம்.
இப்படிப்பட்ட உன்னத வழிபாடுகள் இறைவனைச் சென்று அடையாமல் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருப்பதை நாம் விரும்புவோமா?
நிச்சயமாக மாட்டோம்.
அதைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் கொடுத்துவிட வேண்டும்.
இதன் நோக்கங்கள் இரண்டு.
1. நோன்புக் காலத்தில் நாம் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளுக்குப் பரிகாரமாக இந்த தர்மம் அமையும்.
2. பெருநாளன்று எந்த ஏழையும் பசி- பட்டினியால் வாடக் கூடாது.
ஏழை எளியோரும் உண்டு மகிழ்ந்து பெருநாளன்று மகிழ்ச்சி காண வேண்டும்.
அவர்கள் வீட்டிலும் அடுப்பு எரிய வேண்டும்.
வயிறு குளிர வேண்டும்.
முகம் மலர வேண்டும்.
ஃபித்ரா- பெருநாள் தர்மம் 7.00 ரிங்கிட் முதல் 15 ரிங்கிட் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாதாரண குடும்பத்தின் செலவு 7.00 ரிங்கிட் என்றே வைத்துக்கொள்வோம்.
உங்கள் வீட்டில் உங்களையும் சேர்த்து ஐந்து பேர் இருந்தால் 35 ரிங்கிட்டைப் பெருநாள் தர்மமாக ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்”- இதை வாயளவில் இன்றி, நடைமுறையிலும் உண்மைப்படுத்தும் வாழ்வியல் நெறி இஸ்லாம்.
-சிராஜுல்ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 8:38 am
பூனைகளின் Psi-trailing எனும் பின்தொடரும் ஆற்றல் என்ன என்று தெரியுமா?: வெள்ளிச் சிந்தனை
December 5, 2025, 9:14 am
Are you sleeping alone? - வெள்ளிச் சிந்தனை
November 28, 2025, 7:56 am
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
