நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உழைப்பில் இனிமை கண்ட உத்தமர்கள்..! - வெள்ளிச் சிந்தனை

அது ஒரு இளங்காலைப் பொழுது..!

அலீ பின் அபூதாலிப்(ரலி) அவர்கள் பசியுடன் வீட்டை விட்டுக் கிளம்பினார்கள். ஏதேனும் வேலை கிடைத்தால் பொருள் சம்பாதிக்கலாம் என்கிற எண்ணத்துடன் இங்கும் அங்கும் நடந்தார்கள். 

இறுதியில்- 

ஒரு மூதாட்டியைப் பார்த்தார்கள். வேலையாள் எவரேனும் கிடைப்பாரா என்கிற எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர். 

கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து களி மண் குழியை நிரப்புவதுதான் வேலையே. 

சில பேரீத்தம் பழங்களுக்காக அந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒப்புக் கொண்டார், அலீ(ரலி).

உடனே தண்ணீர் இறைக்கத் தொடங்கினார். நாள் முழுக்க தண்ணீர் இறைத்து வேலையைச் செய்து முடித்தார். அந்த மூதாட்டி இருபது பேரீத்தம் பழங்களைத் தந்தார். 

வீட்டுக்குத் திரும்புகின்றபோது வழியில் அன்பு நபிகளாரைச் சந்தித்தார். 

நபிகளார்(ஸல்) அவரைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். கையில் என்ன வைத்திருக்கின்றீர், என விசாரித்தார்கள். 

‘நான் நாள் முழுக்க உழைத்ததற்காக கிடைத்த பேரீத்தம் பழங்கள்தாம். பனை நாரைக் கொண்டு திரிக்கப்பட்ட கயிற்றைப் பிடித்து இறைத்ததால் என்னுடைய கைகள் காய்த்துப் போய்விட்டன’ என்று ஆர்வத்துடன் பதிலளித்தார் அலீ(ரலி). 

நபிளார்(ஸல்) அந்தக் கைகளை அள்ளி தம்முடைய முகத்தைத் தோய்த்துக் கொண்டார்கள். உழைப்பின் உன்னதத்தைக் கொண்டாடினார்கள். ‘அல்லாஹ் இந்தக் கைகள் மீது அருள் பொழியட்டும்’ என்றார்கள். 

பிறகு சந்தோஷத்துடன் சொன்னார்கள்: ‘சரி, அலீ(ரலி)! எனக்கும் ஒரு பழத்தைத் தாரும். நானும் அதனை ருசிக்கின்றேன்’. 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

- அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset