
செய்திகள் சிந்தனைகள்
இஸ்லாமிய சமூகத்தின் நிர்மாணம் கட்டடங்களும் சம்பிரதாயங்களும் அல்ல; இறைவன் நேசிக்கும் அந்த சிறந்த மனிதன் யார்? - வெள்ளிச் சிந்தனை
இறைவன் நேசிக்கும் அந்த சிறந்த மனிதன் யார்?
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அதிகமாக நேசிக்க கூடிய மனிதர்கள் யார் என்றால் பிறருக்கு பயன் தரக்கூடிய மனிதர்கள்.
அல்லாஹ் அதிகமாக நேசிக்க கூடிய சிறந்த செயல்கள் எதுவென்றால் ஒரு சகோதரனை மகிழ்விப்பது.
அல்லாஹ் நேசிக்கும் சிறந்த செயல்கள் எதுவென்றால்
ஒரு சகோதரனின் கஷ்டத்தை நீக்குவது.
ஒரு சகோதரனின் கடனை அடைக்க உதவி செய்வது.
ஒரு சகோதரனின் பசியைப் போக்குவது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் நேசம் உங்களுக்கு வேண்டுமா?
மனிதர்களை நேசியுங்கள்.
அல்லாஹ்வின் நெருக்கம் பெறவேண்டுமா?
மனிதர்களுடன் நெருக்கமாக இருங்கள்.
மனிதர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
மனிதர்களுக்கு நோவினை கொடுப்பதால் ஒருபோதும் அல்லாஹ்வின் பொருத்தம் பெற முடியாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்கள் சகோதரனுக்கு நீங்கள் உதவி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பான்.
இஸ்லாமிய சமூகத்தின் நிர்மாணம் கட்டடங்களும் சம்பிரதாயங்களும் கலாச்சாரங்களும் அல்ல.
இருப்பவர் இல்லாதவர்களுக்கு கொடுப்பதாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதாலும் ஆரோக்கியமான ஒரு இஸ்லாமிய சமூகத்தை கட்டமைக்க முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எந்த மனிதன்
மனிதர்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பானோ,
கஷ்டங்களை நீக்குவதற்கு உதவி செய்வானோ,
அந்த மனிதன்
அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன்
சுவனத்திற்கு நெருக்கமானவன் மனிதர்களுக்கு நெருக்கமானவன்.
அந்த மனிதன் நரகத்திலிருந்து தூரமாக இருப்பான்.
அல்லாஹ் நேசிக்கும் சிறந்த மனிதர்களில் நம்மையும் சேர்க்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.....
- முஹம்மது குன்ஹி
தமிழில்: ஜொஹரா சுல்தான்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am