நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை

பினாங்கு:

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம்.

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர்.
இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும்,பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.

சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகில் சுமார் 200 நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. 

மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்துடன் இணைந்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  நாட்டில் உள்ள பயனீட்டாளர்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சனைகள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்த விரும்புவதாக அதன் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

பி.ப.சங்கத்தின் ஆய்வுப்படி தினசரி பயன்பாட்டிற்கான குழாய் நீரை வழங்குவதுடன், அடிக்கடி சீர்குலைந்து மாசுபடுகிறது, விவசாயத் துறை.

குறிப்பாக விவசாயிகள், நெற்பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கான முயற்சிகளில் நீர் வழங்கல் பிரச்சினைகளை எதிர்கொள்ப்வர்களாக அவர்கள் உள்ளனர் என்றார் அவர்.

கெடா, பெர்லிஸில் உள்ள மலேசிய விவசாய மேம்பாட்டு வாரியம், பேராக்கில் உள்ள கெரியான் சுங்கை மாணிக் விவசாய மேம்பாட்டுத் திட்டம், கெடா வேளாண்மை மேம்பாட்டு வாரியம்  ஆகியவற்றின் நெல் வயல்களில் தண்ணீர் பிரச்சினை மோசமான நிலையில் உள்ளது.

குவா மூசாங் மாவட்டம், ஓராங் அஸ்லி சமூகத்தினர் மற்றும் உள்பகுதியில் வசிப்பவர்களும் தண்ணீர் இல்லாத பிரச்சினை பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் தினசரி பயன்பாட்டிற்கான மலை நீர் ஆதாரங்கள்  தங்கள் கிராமங்களுக்கு அருகில் மரம் வெட்டுப்படுவதாலும், தோட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளால் தண்ணீர் அழுக்காக அல்லது சேறும் சகதியுமாக வருகிறது என்றனர்.

நாட்டிலுள்ள பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் குறைவது குறிப்பாக வறண்ட காலங்களில் அடிக்கடி நிகழ்கிறது.

அதே சமயம் பல தலைமுறைகளாக நீர் வழங்கல், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருக்கும் இயற்கை ஆறுகள் நச்சுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், துறைகள், ஏஜென்சிகள் இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களை திறம்பட சமாளித்து அதே வேளையில், நீர் விநியோக ஆதாரங்களை முறையாக பராமரிக்கவும் நிர்வகிக்கவும் சம்பந்தப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.ப.சங்கம் கேட்டுகொள்கிறது.

இதே நிலை நீடித்தால் விவசாயத் துறையில் மோசமான பாதிப்பை ஏற்பட்டு இதனால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதும் பாதிக்கப்படும்.

எனவே, பாதிக்கப்பட்ட நீர் பிடிப்புப் பகுதிகளைக் கட்டுப்படுத்தி மீட்டெடுத்தல், நமது நீர் விநியோகத்தை உறுதிசெய்தல், நதி மாசுபாட்டின் சிக்கலைச் சமாளித்தல் மற்றும் இயற்கை நீர் வளங்களை எந்தவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் காப்பாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் தரம் மோசமடைவதற்கான காரணத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு  அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்த விரும்புவதாக முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset