
செய்திகள் சிந்தனைகள்
உழைப்பு என்பது... உழைப்பாளர் தின சிந்தனை
• உழைப்பு என்பது...
உழைப்பு உண்மையாக இருந்தால்...உயர்வு தானாகவே தேடி வரும். உழைப்பு இல்லாமல் வாழ்வு இல்லை. கடின உழைப்பு, நேர்மை, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய வையே வெற்றியின் அடிப்படை. கடின உழைப்பு நம்மிடம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம்..
மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை. உழைக்க சக்தி உள்ளவனே உண்மையில் செல்வந்தன். கடின உழைப்பு, துணிவு இந்த இரண்டையும் பொறுத்துத்தான் நமது வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்; நீடிக்கும்.
கைகளால் விசிறியை அசைத்தால்தான் காற்று வரும். உழைப்பால் நமது உடல் அசைந்தால்தான் உயர்வு வரும். படகு கரை சேர துடுப்பு அவசியம். நமது வாழ்வு கரை சேர உழைப்பு அவசியம். மரண அழைப்பு வரும் வரை... இரண உழைப்பு அவசியம்.
நமது மிகப் பெரிய சொத்து நமது உழைப்பு மட்டும்தான். அதை எவருக்காகவும் எதற்காகவும் நாம் விட்டுத் தரக் கூடாது! அடுத்தவனின் சிந்தனையால் கூட நாம் உயரலாம். ஆனால், உழைப்பு மட்டும் உறுதியாக நம்முடையதாக இருக்கவேண்டும்.
இளமையில் உழைப்பை விதைத்தால், முதுமையில் அதன் வெற்றியை அறுவடை செய்யலாம். இன்றைய உழைப்பு நாளைய வெற்றி. உழைப்பதற்குத் தயங்காத வரை பிழைப்பதற்குத் தடங்கல் இருக்காது. உழைப்பு நமது உடலை வலிமையாக்கும். காயங்களும் தோல்வி களும் துரோகங்களும் நமது மனதை வலிமை யாக்கும்.
உலகில் தாமாக முன்னேறியவர் எவருமில்லை. நாம் உழைக்கத் தயாராக இருந்தால், உலகில் பலரை நமக்கு உதவியாளர்களாக வழங்குவான் வல்லோன் இறைவன்
.ஒரு முக்கியமான அனுபவப் பூர்வமான செய்தி :
நாம் பெறும் ஊதியத்தை விட கூடுதலாக உழைப்பைக் கொட்டத் தயாராக இருந்தால், உழைப்பை விட கூடுதலாக ஊதியம் நம்மை வந்து சேரும். உழைப்பு சன்மானம் பெறுவதற்கு என்று நாம் நினைத்தால் அந்த உழைப்பு நமக்குக் கடினமானதாகத் தோன்றும்.
சிலரது உழைப்பு செடி போல. குறுகிய காலத்தில் அதிகப் பலன் தரும். இன்னும் சிலரது உழைப்பு மரம் போல. நீண்ட காலத்துக்குப் பிறகுதான் பலன் கிடைக்கும். செடி யின் ஆயுள் குறைவு. மரத்தின் ஆயுளோ பல தலைமுறை வரை.
கடினமாக உழைப்போர் அனைவரும் வெற்றி பெறுவ தில்லை. சரியான பாதையைத் தேர்வு செய்து கடினமாக உழைப்பவர்களே வெற்றி பெறுகின்றார்கள்.
இறுதியாக ஒரு நபிமொழி :
உழைப்பாளியின் கூலியை அவனது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்! [நூல் : பைஹகீ / அஸ் - ஸுனனுல் குப்ரா 10769]
இந்த நபிமொழி... 'ஒரு முதலாளி தனது தொழி லாளி வேலை முடித்தவுடன் அவனுக்கான கூலியை வழங்கி விடவேண்டும் என்பதுடன் அந்தத் தொழி லாளி வியர்வை சிந்த உழைக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
கல் உடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை அனை வரும் உழைப்பாளிகளே. அந்த வகையில் உலகில் ஏதா வது ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத் தனை உழைப்பாளிகளுக்கும் 'உழைப்பாளர் தின' வாழ்த்துக்கள்!
• கே. ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm