நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இறையுதவி கிடைக்குமா கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் தருணங்கள் - வெள்ளிச் சிந்தனை

கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயீல் நபிக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. 

கழுத்தில் கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது.

வானுயர்ந்த நெருப்பில் வீசப்படும் வரை இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை.

நெருப்பில் வீசப்பட்ட பிறகே உதவி வந்தது.

கடல் வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா நபிக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகே கடல் பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

இரு மலைக்குன்றுகளுக்கு இடையே ஏழு முறை ஓடும் வரை அன்னை ஹாஜராவுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. 

அதற்குப் பிறகே ஸம்ஸம் நீர் பீறிட்டது.

மீன் விழுங்கும் வரை யூனுஸ் நபிக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. 

விழுங்கிய பிறகே கிடைத்தது.

கிணற்றில் வீசப்படும் வரை யூஸுஃப் நபிக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. 

வீசப்பட்ட பிறகே கிடைத்தது.

மேலே கூறப்பட்டவை அனைத்துமே மனித மனம் திகிலடையும் பொழுதுகள். இறையுதவி கிடைக்குமா கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் தருணங்கள்.

ஆயினும் அல்லாஹ் மீது அவர்களுக்கு இருந்த அளப்பரிய நம்பிக்கையின் காரணத்தால் சோதனையின் உச்சத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உதவினான்.

ஒவ்வொரு சோதனையும் அப்படித்தான். அதன் ஆழம் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம். ஆயினும் அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில்தான் இருக்கிறது என்பதை உறுதியுடன் நம்ப வேண்டும்.

இஸ்லாத்தில் அவநம்பிக்கைக்கு இடமில்லை. எனவே நம்பிக்கையுடன் இருப்போம்.

எந்த மனிதரையும் அவரது சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்பது இறை வாக்கு.

"உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது. நிச்சயமாக, சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது''. (94:5,6)

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset