செய்திகள் சிந்தனைகள்
தவிடு மலைபோல் குவிந்து கிடந்தாலும்..! -மௌலானா மௌதூதி (ரஹ்) - வெள்ளிச் சிந்தனை
மேற்கத்தியக் கல்வியும், நவீன கலாச்சாரமும், பொருளாதார வளர்ச்சியும், அரசியல் உரிமைகளை வென்றெடுத்தலும்தாம் முஸ்லிம்களைத் தொற்றிக்கொண்டுள்ள நோய்க்கான நிவாரணம் எனக் கருதியவர்கள் பெரும் தவறிழைத்தவர்கள் ஆவர். இன்றும் அவற்றையே தீர்வாக நினைப்பவர்களும் தவறு இழைத்துக் கொண்டிருப்பவர்கள்தாம்.
இறைவன் மீது ஆணையாக, ஒருவர் விடாமல் எல்லா முஸ்லிம்களும் எம்.ஏ., பட்டம் பெற்றவர்களாக, பி.ஹெச்.டி முடித்தவர்களாக, பாரிஸ்டர் படித்தவர்களாக ஆகிவிட்டாலும், எல்லாருமே செல்வமும் பணமும் வளமும் பெற்றவர்களாக ஆகிவிட்டாலும், எல்லோருமே தலை முதல் கால் வரை மேற்கத்திய நாகரிகத்தில் திளைப்பவர்களாய் ஆகிவிட்டாலும், அரசாங்கத்தின் அனைத்து பதவிகளும் கவுன்சில்களின் அனைத்து இடங்களும் முஸ்லிம்கள் வசம் வந்துவிட்டாலும்,
அவர்களின் இதயங்களில் நிஃபாக் என்கிற நயவஞ்சக நோய் தொற்றிக் கொண்டிருக்குமேயானால், ஃபர்ளானவற்றை ஃபர்ளானவையாய், கடமையானவையாய் கருதாதவர்களாய் நீடிப்பார்களேயானால், இறைவனுக்கு மாறு செய்வதிலும், இறைக் கட்டளைகளை மீறி நடப்பதிலும், இறைவன் விதித்த வரம்புகளை மீறுவதிலும், எந்தவிதமான நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வதிலும் திளைத்துக் கொண்டிருப்பார்களேயானால், இன்று அவர்களை எத்தகைய இழிவும் கேவலமும் சூழ்ந்து கொண்டுள்ளதோ அதே இழிவும் கேவலமும் அவர்களை அப்போதும் தொற்றிக் கொண்டிருக்கும்.
அவர்கள் தங்களின் ஒழுக்கக்கேடுகள், கெட்ட நடத்தைகள் ஆகியவற்றின் விளைவாக எந்த அழிவுப் படுகுழியில் விழுந்து கிடக்கின்றார்களோ அந்தக் குழியிலிருந்து அவர்களை கல்வி, ஃபேஷன் என்கிற நாகரிகம், பணம், காசு, அதிகாரம் ஆகியவற்றில் யாதொன்றாலும் மேலெழுப்பிவிட முடியாது.
அதிலிருந்து விடுபடுவத்ற்கான ஒரே வழி இறைநம்பிக்கை மிக்க, வலுவான, கட்டுக்கோப்பான, கண்ணியமான ஜமாஅத்தாக மலர்வதுதான். இதற்காக வேண்டி அவர்கள் முதலில் தங்களுக்குள் ஈமானிய உணர்வை, தலைமைக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற பண்பை ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும்.
அந்தப் பண்புகள் இல்லாமல் உங்களால் கூட்டு வலிமையை வென்றெடுக்கவும் முடியாது. உங்களுடைய கூட்டமைப்பில் கட்டுக்கோப்பும் கைகூடாது. உலகத்தில் மேலோங்குகின்ற அளவுக்கு உங்களின் கூட்டு வலிமை வளர்ந்தோங்கவும் செய்யாது.
ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு தனித்தனியாய் சிதறிக் கிடக்கின்ற, மோசமான ஒழுக்கச் சீர்கேடுகளில் சிக்கிக் கிடக்கின்ற எந்தவொரு சமுதாயத்தாலும் உலகத்தின் பிற கட்டுக்கோப்பான, வலுவான சமூகக் குழுக்களுக்கு எதிராகக் களமாடி மேலோங்க முடியாது.
தவிடு மலைபோல் குவிந்து கிடந்தாலும் அதனால் எந்தக் காலத்திலும் வலுவான அரணாக மாறவே இயலாது.
- மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
நூல்: தன்கீஹாத் பக்கம் 162-163
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am