செய்திகள் மலேசியா
தைப்பிங் ஜாலான் ஆயர் கூனிங் ஸ்ரீ நவ காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவி
தைப்பிங்:
தைப்பிங் ஜாலான் ஆயர் கூனிங்கில் 55 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ நவ காளியம்மன் ஆலயம் இப்போது பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு வருகிறது.
40 விழுக்காடு கட்டுமான பணிகள் மட்டுமே பூர்த்தி அடைந்திருக்கும் வேளையில் இன்னும் 60 விழுக்காடு கட்டுமான பணிகள் பூர்த்தி அடைய ஆலய நிர்வாகத்திற்கு ஒன்றரை லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக ஆலய திருப்பணி குழுத் தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
இவ்வாண்டு இறுதிக்குள் ஆலயத்தைக் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஆலய கட்டுமான பணிகள் பூர்த்தி அடைய மனிதவள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி. சிவகுமார் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
இந்நிலையில் மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், மனித அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி மற்றும் மனித வள அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பணிகளின் அதிகாரி மகா கணேஷ் ஆகியோர் ஆலயத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
ஆலய கட்டுமான பணிகள் பூர்த்தி அடைய மனிதவள அமைச்சின் மூலம் நிதியுதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2024, 5:14 pm
புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு தலைவராக அஸ்மி காசிம் நியமனம்
November 18, 2024, 3:05 pm
வீட்டு தளவாட பொருட்களை விற்கும் நபர் கொலை: ஐந்து சந்தேக நபர்கள் கைது
November 18, 2024, 2:31 pm
மலேசியாவில் ஒரே ஒரு Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது: ஜுல்கிஃப்ளி அஹமத்
November 18, 2024, 2:19 pm
கிளோபல் இக்வான் தலைமை செயல்முறை அதிகாரிக்கு வழங்கப்பட்ட டத்தோ பட்டம் திரும்ப பெறப்பட்டது
November 18, 2024, 1:49 pm
உலகளவில் 168 திருவள்ளுவர் சிலைகள்: செவாலியர் வி.ஜி.பி.க்கு தலைநகரில் பாராட்டு
November 18, 2024, 12:14 pm
பிகேஆர் தேர்தல் முறை மாற்றம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
November 18, 2024, 11:41 am
பொருளாதார மேம்பாட்டிற்கு உலக அமைதி அவசியமானது: டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால்
November 18, 2024, 11:32 am
தெலுக் இந்தானில் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பேரணியை நடத்தினர்
November 18, 2024, 10:41 am
3 ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்காப்பு வாதம் புரிய பூங் மொக்தார், அவரது மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு
November 18, 2024, 10:40 am